பயங்கரவாத சட்டத்தில் அரசாங்கத்தின் திருத்தத்திற்கு சர்வதேச தாக்குதல்

Srilanka Law International
By Dhayani Feb 09, 2022 05:16 PM GMT
Report

இலங்கையின் மீள முடியாத "அபாயக் குறைபாடுகளை" கொண்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என சர்வதேச அளவில் குரல் எழுப்பப்பட்டுள்ளது.

புதிய முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் பரிதாபகரமாக போதுமானதாக இல்லாத, கடுமையான சட்டங்களை உள்ளடக்கிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் நீக்க வேண்டும் என சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு (ICJ) கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் தன்னிச்சையாக காலவரையின்றி சித்திரவதை செய்யப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை சமர்ப்பித்த மனித உரிமைகள் அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் 3ஆம் திகதி விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் தொடர்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் 27.01.2022 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டன.

பாரிய பிழைகளைக் கொண்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, நேர்மையற்ற மோசடியான சீர்திருத்த முயற்சிகள் மூலம் சரி செய்ய முடியாது என தெரிவித்துள்ள சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு இதை இல்லாதொழிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

"இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் பேரவையின் மற்றொரு அமர்விற்கு முன்னர், மனித உரிமைகள் சீரழிந்து வரும் நிலையில், தன்னால் இயன்றதைச் செய்வதைக் காட்ட மீண்டும் போராடுகிறது" என சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் கொள்கைப் பணிப்பாளர் இயன் சீடர்மேன் கூறியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகள் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பரந்த அளவிலான தவறான வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சந்தேகிக்கப்படும் இலங்கைக்குள் அல்லது வெளியே உள்ள எந்தவொரு தனிநபர், தனிநபர்கள் குழு, சங்கம், அமைப்பு அல்லது நபர்களின் சுதந்திரத்தை தன்னிச்சையான மற்றும் காலவரையறையின்றி பறிக்க அனுமதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தங்களின் பிரிவு 2, தக்கவைப்பு காலத்தை 18 முதல் 12 மாதங்களுக்கு குறைப்பதன் மூலம் இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயல்கிறது.

சட்டப்பிரிவு 10, காவலில் வைக்கப்பட்டுள்ள அல்லது 12 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர் பிணைக்கு விண்ணப்பிக்க உரிமை அளிக்கிறது. “இந்த திருத்தங்கள் எந்த வகையிலும் அடிப்படை மீறல்கள் பற்றி விவாதிக்கவில்லை.

இதற்குக் காரணம், நீதிமன்றங்களில் வழக்குத் தொடர வாய்ப்பு வழங்கப்படாமல் தனிநபர்களின் சுதந்திரம் ஓராண்டு முழுவதும் பறிக்கப்படுவது தான். பிரிவு 10 இன் துணைப்பிரிவு 20, விசாரணை முடியும் வரை சந்தேகநபர்களை காவலில் வைக்க உயர் நீதிமன்ற உத்தரவைப் பெற தகுதியான அதிகாரிகளை அனுமதிக்கிறது, ”என சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையும் ஒரு பங்காளியாக காணப்படும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) உறுப்புரை 9, சுதந்திரத்தை இழந்த எந்தவொரு நபருக்கும் பல நடைமுறை உத்தரவாதங்களை வழங்குகிறது, அவற்றில் பல பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்களில் இல்லை என அந்த ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளது.

"உதாரணமாக, எந்தவொரு காரணத்திற்காகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரும் உடனடியாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் தடுப்புக்காவலின் சட்டபூர்வமான தன்மையை தீர்மானிப்பதே அதன் நோக்கமாகும்.

நீதித்துறை மேற்பார்வைக்கு உட்படாத நீண்ட வழக்கு விசாரணைக்கு முன் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பது இலங்கையின் சர்வதேச சட்டக் கடமைகளை தெளிவாக மீறுவதாகும்.

” பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற விசேட விதிமுறைகள் நீக்கப்பட வேண்டும் எனவும், சட்டத்தின் ஆட்சிக்குக் கீழ்ப்படியும் குற்றவியல் விதிகளைப் பயன்படுத்தி பயங்கரவாதத்திற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் இயன் சீடர்மேன் வலியுறுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US