திருகோணமலையில் கஜேந்திரன் எம்.பி மீது தாக்குதல்: கிழக்குப் பல்கலைக்கழகம் கடும் கண்டனம்
திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனிமீது சிங்கள காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“சாதரண எங்கள் நினைவேந்தலைக்கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையினையும் வழங்கவேண்டும்” என கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் வலியுருத்தியுள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கை
தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பொத்துவிலில் இருந்து பயணத்தை ஆரம்பித்து, வடக்கு நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.
இதன்போது திலீபனின் உருவப்படத்தின் மீதும் கஜேந்திரன் எம். பி பெரும்பான்மையின காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணொளி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |