நினைவேந்தலைக் குழப்புவதற்கான அரசாங்கத்தின் சதியே நேற்றைய தாக்குதல்: சரவணபவன் கண்டனம்

Trincomalee E Saravanapavan Selvarajah Kajendren
By Erimalai Sep 18, 2023 07:18 AM GMT
Report

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தத் தாக்குதல்கள் அரசாங்கத்தினது ஏற்பாட்டிலேயே நடைபெற்றன என  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுஅமைதியைக் குலைக்கின்றது என்பதைக்காட்டி நினைவேந்தல்களைத் தடுப்பதற்கான அவர்களின் ஏற்பாடு இது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இருவேறு இடங்களில் வைத்து தியாகதீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீதும் வன்முறையாளர்கள் பொலிஸார் முன்னிலையில் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4 காணொளி ஏன் இப்போது வெளியானது.. கேள்வி எழுப்பும் அரச தரப்பு

சனல் 4 காணொளி ஏன் இப்போது வெளியானது.. கேள்வி எழுப்பும் அரச தரப்பு

அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘‘தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றுவதற்கான முயற்சிகள் ஒருபுறம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நினைவேந்தலைக் குழப்புவதற்கான அரசாங்கத்தின் சதியே நேற்றைய தாக்குதல்: சரவணபவன் கண்டனம் | Attack On Gajendran In Trincomalee

அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, பாதுகாப்பு வேலிக்கு நிதி ஒதுக்கப்பட்டமையை தவறு என்று நிரூபிப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மறுபுறம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்களை முன்னெடுப்பதால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று பொலிஸார் காரணங்களை முன்வைப்பதற்கு ஏதுவாக வன்முறையாளர்களை ஏவிவிட்டு நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலை திட்டமிட்ட உளவுத்துறை: மயிரிழையில் உயிர் தப்பினோம்! கஜேந்திரன் எம்.பி பகீர் தகவல் (VIDEO)

தாக்குதலை திட்டமிட்ட உளவுத்துறை: மயிரிழையில் உயிர் தப்பினோம்! கஜேந்திரன் எம்.பி பகீர் தகவல் (VIDEO)

அகிம்சைக்கு வன்முறையாளர்களின் பதில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடந்தால் இவ்வாறான அமைதியின்மை ஏற்படும் என்பதை நீதிமன்றத்துக்கு பொலிஸார் அறிக்கையிடுவதற்கு வசதியாகவே திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

நினைவேந்தலைக் குழப்புவதற்கான அரசாங்கத்தின் சதியே நேற்றைய தாக்குதல்: சரவணபவன் கண்டனம் | Attack On Gajendran In Trincomalee

காந்தி கூட செய்யத் துணியாத ஓர் அகிம்சைப்போராட்டத்தை கண்முன்னே நடத்திக்காட்டி, பாரத தேசத்தின் தோலுரித்தவன் தியாக தீபம் திலீபன் அகிம்சாவாதியை நினைவுகூருவதற்கே இந்த நாட்டில் இடமில்லை.

அகிம்சைக்கு வன்முறையால் வன்முறையாளர்கள் பதிலளித்திருக்கின்றார்கள். தந்தை செல்வா அன்று அகிம்சையால் போராடியபோது வன்முறையாளர்கள் தாக்கியதால்தான் ஒரு கட்டத்தில் தமிழர்கள் திருப்பித் தாக்கத் தொடங்கினார்கள் என்ற வரலாற்றை 14 ஆண்டுகளில் மறந்துவிட்டார்கள்போலும்.

திலீபன் பேரணி மீது குண்டர்கள் தாக்குதல்: சிங்கள செயற்பாட்டாளர் கடும் கண்டனம்

திலீபன் பேரணி மீது குண்டர்கள் தாக்குதல்: சிங்கள செயற்பாட்டாளர் கடும் கண்டனம்


மீண்டும் இனவாதம்

சிறிலங்கா பொலிஸ் எப்போதும் பௌத்த – சிங்கள பேரினவாதத்தின் அடிவருடிகளாகவே இருக்கின்றனர் என்பதற்கு அவர்கள் கண்முன்னால் நடந்த தாக்குதல் மிகச் சிறந்த உதாரணம். பாதுகாக்கவேண்டிய பொலிஸாரே வன்முறையாளர்களுக்கு ஒத்தாசை புரிந்தமையால்தான் இந்த நாட்டில் ஆயுதப்போராட்டம் முகிழ்ந்தது என்பதையும் மறந்துவிட்டார்கள்.

நினைவேந்தலைக் குழப்புவதற்கான அரசாங்கத்தின் சதியே நேற்றைய தாக்குதல்: சரவணபவன் கண்டனம் | Attack On Gajendran In Trincomalee

தேர்தல் வெற்றிக்காக சொந்த மக்களையே கொலைசெய்த கொடூரர்கள் ஆட்சியில், மீண்டும் இனவாதம் விதைக்கப்படுகின்றமை தெளிவாகத் தெரிகின்றது.

தேர்தலுக்காக விதைக்கப்படும் இனவாதம் இலகுவில் அடங்காது. இந்த நாடு மீண்டும் ஓர் குருதிக் களரியை நோக்கியே செல்லப்போகின்றது என்பதற்கே கட்டியம்கூறுவதாகவே நேற்றைய சம்பவம் நடைபெற்றிருக்கின்றது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் தாக்குதலுக்கு இலக்கான தியாக தீபம் திலீபனின் ஊர்தி வவுனியாவை வந்தடைந்தது

திருகோணமலையில் தாக்குதலுக்கு இலக்கான தியாக தீபம் திலீபனின் ஊர்தி வவுனியாவை வந்தடைந்தது

பயண பொதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்....! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

பயண பொதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர் யார்....! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

you may like this


மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US