தாக்குதலை திட்டமிட்ட உளவுத்துறை: மயிரிழையில் உயிர் தப்பினோம்! கஜேந்திரன் எம்.பி பகீர் தகவல் (VIDEO)
திருகோணமலையில் தியாகதீபம் திலீபனை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கியவாறு முன்னெடுக்கப்பட்ட ஊர்திப்பவனியின் போது உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலையில் தியாகதீபம் திலீபனை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கியவாறு முன்னெடுக்கப்பட்ட ஊர்திப்பவனியின் போது சிங்கக்கொடியினை ஏந்தியிருந்த பெண்கள் உட்பட சிலர் தடைகளை ஏற்படுத்தி காட்டுமிராண்டி தனமாக கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்த தாக்குதல் திட்டத்தினை பொலிஸ் உளவுத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளதுடன், பொலிஸாரின் உடந்தையுடன் இராணுவ புலனாய்வுதுறையினர், பொலிஸ் புலனாய்வுதுறையினர் தாக்குதலை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சற்றுநேரம் இருந்திருந்தால் எங்களை கொலை செய்திருப்பார்கள்.எங்களது ஊர்திப்பவனியின் பாதுகாப்பிற்காக வந்த இராணுவ புலனாய்வுதுறையினரே தாக்குதலை திட்டமிட்டுள்ளனர்.
எங்களது பாதை திடீரென மாற்றப்பட்ட நிலையில்,மாற்று பாதையினை இரகசியமாக தெரியப்படுத்தி கொலைவெறி தாக்குதலை திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.