விரட்டி விரட்டி தாக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் (Video)
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குழுவொன்றால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்போது தேசபந்து தென்னக்கோனை சிலர் விரட்டி விரட்டி தாக்கும் காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.
சற்று முன்னர் அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் தேசபந்து தென்னக்கோனின் வாகனம் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து உடைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.
தேசபந்து தென்னக்கோனின் சாரதி கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து தென்னக்கோன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சாரதி கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கிய பின் வைத்திசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
கொழும்பு - அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் வாகனத்தின் மீதும் தீ வைக்க முற்பட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் நிலைமை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
என்ற போதும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவரை பிடித்த நிலையில் அதில் ஒருவர் தப்பியோடியுள்ளதாகவும் தெரியவருகிறது.



உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Post Office திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து முதிர்ச்சியில் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம்? News Lankasri
