வவுனியாவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்
வவுனியா - கற்பகபுரம் பகுதியில் பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெண்ணொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கற்பகபுரம் பகுதியில் அமைந்துள்ள காணி விவகாரம் தொடர்பாக குறித்த பெண்ணுக்கும் அவரது உறவினரான ஆண் ஒருவருக்கும் முரண்பாடு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், முரண்பாடு முற்றிய நிலையில் குறித்த நபரால் அப்பெண் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் காயமடைந்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினையும் பதிவு செய்துள்ளார்.
இதேவேளை குறித்த நபர் தங்களை தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி
திட்டியதுடன் தமது கைத்தொலைபேசியையும் உடைத்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினர்
தெரிவித்துள்ளனர்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
