யாழில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்
யாழில் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது சந்தேகநபர்கள் இருவர் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம் - திருநகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. திருநகரில் நேற்றிரவு குடும்ப உறவினர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது சகோதரர்கள் இருவர் தாக்குதல் நடத்தி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை தொடர்ந்து திருநகர் பகுதிக்கு வந்த பொலிஸார் சிலர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் அடிப்படையில், தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் நாவற்குழி பகுதிக்கு சென்று தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri