காட்டு யானைகளின் அட்டகாசம்: அழிந்து போன 300 தென்னம்பிள்ளைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை நெடியமடு 6 ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றினை காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் நேற்றிரவு (4) கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை தென்னை உள்ளிட்ட பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியுள்ளதுடன் குடியிருந்த வீட்டின் சுவரையும் சேதப்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டிற்குள் ஒரு வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் உறங்கிக்கொண்டிருந்த வேளையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீபாவளி பண்டிகையினை இந்துக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவரும் நிலையில் இவ்வாறு பிரதேச மக்கள் அந்த மகிழ்ச்சினை அனுபவிக்கமுடியாத நிலையே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் ஒரே இரவில் 300 வரையான தென்னம்பிள்ளைகளை அழித்துள்ளன.
கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம மக்கள் 1984 ஆம் ஆண்டு நாட்டின் அனர்த்தம் காரணமாக தங்கள் வாழ்விடங்களை விட்ட வெளியேறினார்கள்.
இதன்போது அவர்களின் வாழ்விடங்களில் இருந்த வான்பயிர்கள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட போது எதுவிதமான வளங்களும் இல்லாத நிலையில் தங்கள் காணிகளை துப்பரவு செய்து தென்னங்கன்றுகளை நாட்டி வைத்துள்ளார்கள்.
இவ்வாறு பல மக்களின் தென்னந்தோட்டங்கள் காட்டுயானைகளால் அழிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
வடக்கினையும் கிழக்கினையும் இணைக்கும் பகுதியின் அருகில் அமைந்துள்ள இந்த மக்களின் விவசாய செய்கை காட்டு யானைகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.
நிலக்கடலை செய்கை,தெங்கு செய்கைக்கு உகந்த நிலமாக காணப்படும் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு கடந்த இரண்டு நாட்களாக கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை 300 வரையான தென்னம்பிள்ளைகளை அழித்து நாசம் செய்துள்ளன.
தென்னம் பிள்ளைகள் நாட்டி 10 ஆண்டுகள் கடந்து விட்டு அதில் இருந்து பயனினை பெறும் தறுவாயில் காய்க்கும் மரங்களை விழுத்தியுள்ளதுடன் பாளை தள்ளவுள்ள மரங்களையும் விழுத்தி குருத்தினை பிடுங்கியுள்ளதுடன் வளர்ந்து வரும் இளம் தென்னங்கன்றுகளையும் யானை விட்டுவைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் கிராமத்திற்கு காட்டுயானையில் இருந்து பாதுகாக்க யானை வேலியினை அமைத்துத்தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும், இவ்வாறு நாளாந்தம் இழப்பினை சந்தித்துவரும் தெங்கு செய்கையாளர்களுக்கு அரசாங்கம் இழப்பீட்டினை பெற்றுத்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
