நாடாளுமன்ற உறுப்பினர் வெல்கம மீதான தாக்குதல்: சந்தேகநபர்கள் இருவர் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது
மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் கொட்டாவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீதான தாக்குதல்
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, கடந்த 9ஆம் திகதி கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானார். இந்த சம்பவத்தில் அவரது பாதுகாப்பு ஊழியர் மற்றும் சாரதி ஆகியோரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.
இதன்போது, அவரின் தலை மற்றும் கை முதலான பகுதிகளில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன் அவரின் சாரதி மற்றும் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரும் காயங்களுடன் சிகிச்சை பெற்றிருந்தனர்.
மேலும், அவர் பயணித்த ஜீப் ரக வாகனமும் சேதமாக்கப்பட்டு, தீ
வைக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப் புலனாய்வுத்
திணைக்களம் இரண்டு சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
