திருகோணமலையில் பாடசாலை முன்பாக தாக்குதல் சம்பவம்: வெளியாகியுள்ள சிசிடிவி காணொளி
திருகோணமலையில் பாடசாலையொன்றின் முன்பாக நின்று கொண்டிருந்த நபரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசிடிவி காணொளியொன்று வெளியாகியுள்ளது.
ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இருந்து தனது, மகளை அழைத்துச் செல்ல காத்திருந்த தந்தை மீது முச்சக்கரவண்டியில் வந்த சிலர் கடந்த ஏழாம் திகதி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி இன்று (12) வெளியாகி உள்ளது.
பெற்றோரின் கோரிக்கை
இந்த நிலையில், பாடசாலை முடிவடைகின்ற நேரங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கருதி, பாடசாலைகளின் முன்பாக பொலிஸாரை கடமையில் நிறுத்துமாறு பெற்றோர் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறான சூழலில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
