யாழில் வீடொன்றின் மீது தாக்குதல்
யாழில் மர்ம நபர்களால் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுதுமலை தெற்கு, இரும்புக்காரன் வீதியில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
குறித்த தாக்குதலானது மேற்குறிப்பிட்ட பகுதியைச் சேர்நத சிவானந்தன் சஜிரதன் என்பவர் மீது நடாத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (27) அதிகாலை 02.30 மணியளவில் இரண்டு மோட்டார்
சைக்கிள்களில் வந்த நால்வர், அவரது வீட்டுக்குள் உள்நுழைந்து இவ்வாறு
தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் என முதற்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
