ஆளுங்கட்சி அரசியல்வாதியின் பெயரை பயன்படுத்தி பிரதேசசபை உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல் முயற்சி(Photos)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் ஜிப்பிரிக்கோவின் வீட்டிற்கு போதையில் வந்த நபரொருவர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரான அங்கஜன் இராமநாதனின் பெயரைப் பயன்படுத்தி தாக்குதலுக்கு முயற்சித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குள், நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் புகுந்து தாக்குவதற்கு முயற்சித்ததோடு, தடுக்க முயன்ற பிரதேசசபை உறுப்பினரின் தந்தையையும் கீழே தள்ளித் தாக்கியுள்ளார்.
அத்துடன் வீட்டு வேலியின் தகரங்களைச் சேதமாக்கி வீட்டிலிருந்த பெண்களையும் அச்சுறுத்தியமையால் அப்பகுதியில் மக்களிடையே பரபரப்பான நிலை தோன்றியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பிரதேசசபை உறுப்பினர் இளவாலை பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளார்.








கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
