வயோதிப பெண்ணை தாக்கி நகைகள் திருட்டு:பொலிஸார் தீவிர விசாரணை(Photo)
திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையாக இருந்த வயோதிப பெண்ணொருவரை சுத்தியலால் தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று கிண்ணியா பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
கிண்ணியா- பைசல் நகர் பகுதியில் வசித்து வந்த அப்துல் லத்தீப் பாத்தும்மா (79வயது) என்ற பெண் தனிமையாக இருந்தபோது இருவர் தனது வீட்டுக்கு வந்து சுத்தியலால் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
நகைகள் திருட்டு
இதேவேளை கழுத்தில் இருந்த தோடு, தங்க ஆபரணங்களை கழற்றி சென்றதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
கிண்ணியா பிரதேசத்தில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றமையால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் தீவிர விசாரணைகளை
மேற்கொண்டு வருவதுடன் சிசிரிவி காணொளிகளையும் பெற்று விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
