யாழில் தேவாலயம் மீதான தாக்குதல் மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே: அருட்தந்தை யேசுரட்ணம்
யாழ் கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலய சொரூபங்கள் இன்று அதிகாலை உடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புனித அந்தோணியார் சிற்றாலயம் நேற்றிரவு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் சொரூபங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை செய்தவர் ஏற்கனவே எமக்கு அறிமுகமானவர்.
அவர் ஒரு மனநோயாளி நீண்ட காலமாக இந்த ஆலயத்திலேயே தங்கியுள்ளார் நாங்கள் நீண்ட முறை அவர்களை வெளியேற்றப் பார்த்தோம்.ஆனால் அவர் போகவில்லை.
இது வேண்டுமென்று செய்யப்பட்ட ஒரு விடயம் அல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். அவரை பொலிஸார் நேரடியாகக் கைது செய்துள்ளார்கள்.
பின்னர் எனக்கு அறிவித்திருந்தார்கள் நான் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளேன் அதனுடைய தொடர்ச்சியான நடவடிக்கையினை பொலிஸார் எடுப்பார்கள்.
எனவே இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை கிறிஸ்தவ தேவாலயம் மீது
தாக்குதல் நடத்தப்பட்டது என யாரும் குழப்பமடையத் தேவையில்லை இது ஒரு மன
நோயாளியினால் மேற்கொள்ளப்பட்ட செயல் என்பதனையும் வேண்டுமென்று செய்யப்பட்ட
விடயமல்ல என்பதையும் நான் மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam