50இற்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்த காட்டு யானைகள் (படங்கள்)
புத்தளம் - கல்லடி, மதுரகம பகுதியில் 50இற்கும் அதிகமான பயன்தரும் தென்னை மரங்கள் காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று (27.10.2022) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
திணைக்கள அதிகாரிகளின் அசமந்த போக்கு
எனினும் தொடர்ந்தும் காட்டுயானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியும், அவர்கள் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனவு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அச்சுறுத்தும் காட்டுயானைகள்
அதேநேரம், இரவு வேளைகளில் கூட அவசர நிலைமைகளுக்கு வெளியில் செல்ல முடியாத நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே இந்த விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.











13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
