புத்தளம் கடற்கரையில் ஒதுங்கிய கஞ்சா பொதிகள்: சந்தேகத்தில் பொலிஸார்
புத்தளம் உடப்பு பிரதேசத்தில் பெரும் தொகையான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படையின் உடப்பு பிரதேச உப பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது நேற்று(19) கடலோரத்தில் கரையொதுங்கியிருந்த மூன்று கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கஞ்சா பொதிகள்

இதே வேளை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது உடப்பு, பெரியபாடு பிரதேசத்தின் கரையோரமெங்கும் ஆங்காங்கே கரையொதுங்கியிருந்த ஏராளமான கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கஞ்சா பொதிகளின் பெறுமதி
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளின் எடை 543 கிலோகிராம் என்றும் அவற்றின் பெறுமதி 145 மில்லியன் ரூபா என்றும் தெரியவந்துள்ளது.

இந்த படகிலிருந்து கிடைக்கபெற்ற கஞ்சா பொதிகள் கடலில் படகு விபத்துக்குள்ளானதன் காரணமாக கரையொதுங்கியிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan