தமிழர் பகுதியில் வெள்ளைவானில் வந்தவர்களால் குடும்பஸ்தர் மீது தாக்குதல்
முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்தில் வீட்டில் இருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது வெள்ளைவானில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலானது முள்ளியவளை - தண்ணீரூற்று பகுதியில் நேற்று(14.12.2024) இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில், பாதிக்கப்பட்ட நபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு இலக்கான குடும்பம்
யாழ்ப்பாணத்தினை சேர்ந்த நபர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த கும்பலால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸார் என கூறி குறித்த குடும்பஸ்தரை அவரது வீட்டிற்குள் அழைத்து சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
மேலும், பாதிக்கப்பட்ட நபரிடம் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
