இலங்கையில் ATM இயந்திரங்கள் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்
இலங்கையில் ATM இயந்திரங்கள் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர அறிவித்துள்ளார்.
அந்த வகையில், பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாட்டின் அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளைப் பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றவர்களின் உதவியின்றி சேவைகளை சுயமாக முன்னெடுத்தல்
இது தொடர்பில் பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அத்துடன், இந்த நவீன வசதிகள் மூலம் மாற்றுத்திறனாளி நபர்கள் மற்றவர்களின் உதவியின்றி தங்களது வங்கிச் சேவைகளைத் தாங்களே சுயமாகவும் எளிதாகவும் மேற்கொள்வதற்கு இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.