ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளையிடப்பட்ட சம்பவம்! கை - கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாரதி மீட்பு (video)
கம்பளை நகரில் கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலையளவில் நான்கு சந்தேகநபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை முற்றாக அகற்றி கொண்டு சென்றுள்ளனர்.
சிற்றூர்தியொன்றில் வந்த முகமூடி அணிந்த நான்கு நபர்கள் கொண்ட குழுவே இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
கைப்பற்றப்பட்டுள்ள சிற்றூர்தி
இதேவேளை சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் சிற்றூர்தியை இன்று காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிற்றூர்தியில் அதன் சாரதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri