கிளப் வசந்தவின் மனைவியிடம் இருந்த துப்பாக்கி! பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்கள்
அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது உயிரிழந்த கிளப் வசந்த என்ற செல்வந்தரின் மனைவி வைத்திருந்த துப்பாக்கி சட்டவிரோதமானது என்று பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்(Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் காலை, அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சைக்குத்தும் நிலையம் ஒன்றில் வைத்து கிளப் வசந்த உள்ளிட்டவர்கள் மீது சிலரால் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடாத்தப்பட்டது.
சட்டவிரோத துப்பாக்கி
இதன்போது, கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்தனர்.
இதன்போது, சம்பவ இடத்தில் KPI என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன. அத்தோடு, கிளப் வசந்த மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் இருந்த ஒரு துப்பாக்கியும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த துப்பாக்கி சட்டவிரோதமானது என்று பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று அறிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் மறைந்திருக்க முடியாது எனவும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் டிரான் அலஸ்(Tiran Alles) குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்செயல் வெளிநாட்டில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டரை மாதங்களாக திட்டமிட்டு பிறகு இவ்வாறு ஒரு சம்பவம் நடத்தப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் டிரான் அலஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
