இரட்டைக்கொலை சம்பவம்: சந்தேகநபர்கள் தொடர்பான புதிய தகவல்
அத்துருகிரியவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பின்னர் கொலையாளிகள் தப்பிச்சென்ற பேருந்து கதிர்காமம் பிரதேசத்தில் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் (06) ஆம் திகதி தெற்கு அதிவேக வீதியில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரையும் அம்பலாங்கொட பிரதேசத்தில் இருந்து அத்துருகிரிய பகுதிக்கு அழைத்துச்செல்ல பயன்படுத்திய வான் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

பேருந்து பயணித்த சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர விசாரணையில் தப்பிச்செல்ல பயன்படுத்திய பேருந்து கதிர்காமம் பகுதியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களும் பேருந்தும் மேலதிக விசாரணைகளுக்காக அத்துரிகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், கொலை இடம்பெற்ற பின்ன் பேருந்து பயணித்த சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 8 மணி நேரம் முன்
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தடுத்து நிறுத்துங்கள் - தமிழக முதல்வருக்கு யாழ்.கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை!
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்