வெளிநாட்டிலிருந்து பெண்ணுக்கு வந்த கோடிக்கணக்கான பணம்: பொலிஸார் விசாரணை
பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு 57 கோடி ரூபா பணத்தை புழக்கத்தில் வைத்திருந்த பெண் ஒருவரை கண்டி குற்றப்புலனாய்வுப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் எட்டு அரச மற்றும் தனியார் வங்கிக் கணக்குகளை பராமரித்து வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கண்டி உள்ள பொலிஸ் பரிசோதகரின் இல்லத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதையடுத்து, போதைப்பொருளைப் பெறுவதற்காக பணம் செலுத்தப்பட்ட கணக்கு இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சிபானை இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பில் அங்கம்
தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இலங்கையிலிருந்து கஞ்சிபானை இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பில் அங்கம் வகிப்பவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது வங்கி கணக்குகளுக்கு வெளிநாட்டிலிருந்து பெருந்தொகை பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |