தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மது விருந்து நடத்திய விளையாட்டு வீரர்களுக்கு ஏற்பட்ட கதி
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கத்துடன் இணைந்து இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஒழுக்கத்தை மீறி நடந்துக்கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு தற்காலிக போட்டி தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற அனைத்து மாநில மெய்வல்லுநர் போட்டிகளில் கலந்துக்கொள்ளவிருந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகளுக்கு ஒழுக்காற்று விசாரணைகள் முடியும் வரை போட்டிகளில் கலந்துக்கொள்ள தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவர்களில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொள்ள உள்ள இரண்டு வீரர்களுக்கு மாத்திரம் போட்டியில் கலந்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பின்னர் அவர்களுக்கும் போட்டிகளில் விளையாட தற்காலிக தடைவிதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிரு்நத போது சுகாதார வழிக்காட்டல்களை மீறி மதுபான விருந்த நடத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக விசாரணை நடத்த ராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே தலைமையில் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri