உலகக்கிண்ண கிக்பொக்சிங் போட்டிக்கான தெரிவுப் போட்டிக்கு தெரிவானோர் கௌரவிப்பு (Photos)
உலகக்கிண்ண கிக்பொக்சிங் போட்டிக்கான தெரிவுப் போட்டிக்குத் தெரிவாகிய 14 வீர, வீராங்கனைகளை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கெளரவித்துள்ளார்.
எதிர்வரும் 25.02.2022ஆம் திகதி தொடக்கம் 01.03.2022ஆம் திகதி வரை டுபாய் நாட்டில் நடைபெற இருக்கின்ற உலகக்கிண்ண கிக்பொக்சிங் போட்டிக்கான தெரிவுப் போட்டிக்கு வடமாகாணத்தினை பிரதிபலித்து 14 வீர, வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.
குறித்த வீரர்கள் தொடர்ச்சியாக பல தேசிய, சர்வதேச ரீதியிலான போட்டிகளில் பங்குபற்றி பல தங்கப் பதக்கங்களை ஈட்டித்தந்தவர்கள்.
இவர்கள் இச்சர்வதேச போட்டியில் கலந்துகொண்டு போட்டியிட்டு வெற்றிபெற வாழ்த்தியும் இவர்கள் உலக கிண்ண போட்டியில் சாதிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பாராட்டியிருந்தார். அவர்களுக்கான நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.