ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது – பிரதமர்
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை வீர வீராங்கனைகள் மனம் தளர்ந்துவிடக் கூடாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீர வீராங்கனைகள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், வீர வீராங்கனைகள் இந்தப் போட்டித் தொடரில் எதிர்பார்த்த அடைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டாலும் அதனையிட்டு மனம் தளர்ந்துவிடக் கூடாது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை உருவாக்கிக் கொள்வது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளார்.
அடுத்த போட்டியில் பங்கேற்று வெற்றிகளை ஈட்டிக் கொள்ள திடசங்கற்பம் பூண வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது முக்கியமானது எனவும் விளையாட்டுத்துறைக்கு அரசாங்கம் போதியளவு ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam