கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா : தலைவர்களின் கூட்டுச் சந்திப்பில் இணக்கம்
நடைபெறப்போகும் மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா(A. L. M. Athaullah) களமிறங்கவுள்ளதாக தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பீட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியது என தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸின் வாக்குப் பலம்
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச்சின்னத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அரசியல் பீட வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்குப் பலம் சரிவிலிருந்து நாடாளுமன்றத் தேர்தலில் பின் உயர்வடைந்துள்ளது.
அதேவேளை,நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் முஸ்லிம் கட்சிகளின் வாக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
