புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ரிஷி சுனக் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் (united Kingdom) பொதுத் தேர்தல் முடியும் வரை புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் நிறுத்திவைக்கப்படும் என ரிஷி சுனக் (Rishi Sunak) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு பிரித்தானியாவில் பல முக்கிய விடயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுத் தேர்தல்
இந்த நிலையில், பிரித்தானியாவிலிருந்து எப்போது நாடு கடத்தப்படுவோமோ என்ற அச்சத்திலிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியாக இந்த விடயம் அமைந்துள்ளது.
விடயம் என்னவென்றால், தேர்தல் முடிவுகளில் ரிஷி சுனக் பிரதமர் பதவியை இழப்பாரானால், ருவாண்டா திட்டம் செயல்படாமலே போகவும் வாய்ப்புள்ளது.

இதற்கு காரணம், லேபர் கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், ருவாண்டா திட்டமே ரத்து செய்யப்படும் என லேபர் கட்சித் தலைவரான கீர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri