இன்று முதல் கிடைக்கும் பணம் : இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று(01.11.2023) முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்ள குறைபாடுகளைத் தீர்க்கும் வகையில் நவம்பர் மாதம் 06ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை அஸ்வெசும வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து கொடுப்பனவுகளும் கிடைக்கும்
இந்தநிலையில், ஜீலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவினையும் இந்த மாதத்திற்குள்ளேயே வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அஸ்வெசும நிவாரணத் திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் பல கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
அத்துடன், இந்த வருடத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளும் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.