வங்கிக் கணக்கில் பிரச்சினை : இந்த வாரத்திற்குள் இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள பணம்
ஒருசிலரின் வங்கிக் கணக்குகளில் இருந்த பிரச்சினை காரணமாக அவர்களுக்கு இந்த நிவாரணம் பணம் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இவ்வாறு சுமார் 2 இலட்சம்பேர் வரை இருக்கின்றனர். இவர்களுக்கான நிவாரண பணம் இந்த வாரத்துக்குள் கிடைக்கும் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் அஸ்வெசும நிவாரண திட்டம் 24 இலட்சம் பேருக்கு வழங்க தீர்மானித்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரண திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உட்டப எதிர்க்கட்சியினர் செயற்பட்டு வருகின்ற விதம் தொடர்பில் கவலையடைகிறோம்.
கஷ்டப்படும் மக்களுக்கு கிடைக்க இருக்கும் நிவாரணத்தை தடுத்து நிறுத்தும் வகையிலேயே செயற்பட்டு வந்தனர். என்றாலும் அரசாங்கம் இந்த திட்டத்தை வெற்றிகரமாக தற்போது முடிந்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு தகுதி இல்லை..
எதிர்க்கட்சித் தலைவர் நாட்டுக்கு செய்ததொன்றும் இல்லை. அவர் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள அரைவாசிக்கும் குறைவான நிதியையே வழங்கி இருந்தார். மிஞ்சிய பணத்தை வழங்க முடியாமல் போனதால் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாகி இருந்தனர்.
அதேபோன்று அவர் மக்களுக்கு தொழில் வழங்கும்போதும் அதனை முறையாக மேற்கொள்ள தவறியதால் பாரியளவிலானவர்கள் தங்களின் தொழிலை இழக்க நேரிட்டனர். அதனால் தனக்குரிய பொறுப்பை சரியாக செய்ய தவறிய எதிர்க்கட்சித் தலைவர், அஸ்வெசும நிவாரண திட்டம் தொடர்பில் விமர்சிப்பதற்கு தகுதி இல்லை.
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாமலே எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு ஆதரவளிக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டு வருவதனால் அவரின் எதிர்கால அரசியல் தொடர்பில் கேள்வி எழுகிறது.
அத்துடன் நாடு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டின் தலைவர் பொறுப்புடன் செயற்பட்டு வரும்போது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஓரளவேனும் பொறுப்புடன் செயற்படவேண்டும். ஆனால் அவ்வாறு செயற்படுவதை காணக்கூடியதாக இல்லை. அரசாங்கத்தின் அனைத்து வேலைத்திட்டங்களையும் குழப்பும் வகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர்.
அத்துடன் அஸ்வெசும நிவாரண திட்டத்தில் 6இலட்சத்து 89ஆயிரத்து 803பேரின் வங்கி கணக்குகளுக்கு 4,395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருக்கிறது.
ஒருசிலரின் வங்கிக் கணக்குகளில் இருந்த பிரச்சினை காரணமாக அவர்களுக்கு இந்த நிவாரணம் பணம் கிடைக்காமல் இருந்திருக்கிறது. இவ்வாறு சுமார் 2இலட்சம்பேர் வரை இருக்கின்றனர்.
இவர்களுக்கான நிவாரண பணம் இந்த வாரத்துக்குள் கிடைக்கும். அத்துடன் அஸ்வெசும நிவாரண திட்டம் 24 இலட்சம் பேருக்கு வழங்க தீர்மானித்திருக்கிறோம். இதற்காக அரசாங்கம் 206 பில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
