குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வெள்ளிக்கிழமை முதல் கிடைக்கவுள்ள பணம்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பெற்றுக் கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது தொடர்பான தகவல்களை இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
மாவட்ட செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி
இதன்படி, ஜூலை மாதத்திற்கான சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வயோதிபர்களின் கொடுப்பனவுகளுக்கான 2,684 மில்லியன் ரூபா நிதி அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் திறைசேரியால் வழங்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், முதியோர் கொடுப்பனவை தபால் நிலையங்களிலும் விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை பிரதேச செயலகங்களில் இருந்தும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ජුලි මසට අදාල වකුගඩු රෝගි, ආබාධිත සහ අඩු ආදායම්ලාභි වැඩිහිටි දීමනා වෙනුවෙන් රු. මි. 2684 ක මුදල් සියළු දිස්ත්රික් ලේකම් කාර්යාල වෙත මහාභාණ්ඩාගාරය ලබා දී ඇත. ඒ අනුව වැඩිහිටි දීමනාව තැපැල් කාර්යාල මගින් ද ආබාධිත සහ වකුගඩු දීමනාව ප්රා/ලේ කාර්යල මගින් ද සිකුරාදා සිට ලබාගත හැක. pic.twitter.com/t0kpk6GSKO
— Shehan Semasinghe (@ShehanSema) August 23, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |