விரைவில் வங்கிக் கணக்கிற்கு வரும் பணம்! புதிய விண்ணப்பங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
அஸ்வெசும சமூக நலன்புரித் திட்ட உதவிகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தற்போது பிரதேச செயலாளர்களின் தலைமையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் 2024ஆம் ஆண்டுக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணியை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வெசும என்பது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல.
மக்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
சமுர்த்தி வங்கிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் மத்திய வங்கியின் ஊடாக ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை தயாரிக்க சமுர்த்தித் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போது வழங்கப்பட்டுள்ள வங்கிக்கணக்குகள் தொடர்பில் உறுதிப்படுத்தல் பணிகள் நிறைவடைந்ததுடன் அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கூடிய விரைவில் வங்கிக் கணக்குகளைத் தொடங்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |