அஸ்வெசும நிவாரணத் திட்டம்! மேன்முறையீடு செய்துள்ளவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

Shehan Semasinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples Money
By Benat Jul 11, 2023 04:30 PM GMT
Report

அஸ்வெசும நிவாரணத் திட்டம் தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடு, முறைப்பாடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக மீளாய்வு செய்யப்படும் எனவும் தகுதிவாய்ந்த தரப்பினர்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,  அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதல் பயனாளர் பெயர் பட்டியலுக்கு எதிராக நிறைவடைந்த 20 நாட்களுக்குள் மாத்திரம் 968,000 மேன்முறையீடுகளும்,17,500 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். 

கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள்

அஸ்வெசும நிவாரணத் திட்டம்! மேன்முறையீடு செய்துள்ளவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு | Aswesuma Samurdhi Welfare

சமுர்த்தி நலன்புரி திட்டத்துக்கு பதிலாக அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கு 33 இலட்ச பேர் விண்ணப்பித்த நிலையில் 22 இலட்சம் பேருக்கு குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் நிவாரண கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்தது.

இதனடிப்படையில் ஆரம்பக்கட்ட 4 இலட்சம் குடும்ப பயனாளர்களுக்கு ஐந்து மாதகாலத்துக்கும், சமூக கட்டமைப்பில் அவதானம் நிலையில் உள்ள நான்கு இலட்ச குடும்பங்களுக்கு 08 மாத காலத்துக்கும், வறுமை நிலையில் உள்ள 08 இலட்ச குடும்பங்களுக்கும், அதி தீவிர வறுமை நிலையில் உள்ள 04 இலட்ச குடும்பங்களுக்கு 03 வருட காலத்துக்கும் நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கபபட்டது.

அரசாங்க அரசாங்கத்தின் நலன்புரித் திட்டத்தின் கொள்கைக்கு அமைய இதுவரை காலமும் 16,55000 சமுர்த்தி பயனாளர்களுக்கு மாத மற்றும் வருட அடிப்படையில் நிவாரண நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. தற்போது அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் அந்த எண்ணிக்கை 12 இலட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதல்கட்ட பயனாளர்களின் பெயர் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி வெளியிடப்பட்டு மேன்முறையீடு மற்றும் முறைப்பாடளிப்பதற்கு 10 நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டது.

புதிய பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் பிரதேச செயலகங்கள் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டதால் மேன்முறையீடு செய்வதற்கான காலவகாசம் நேற்று முன்தினம் (10)ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இதற்கமைய வழங்கப்பட்ட காலவகாசத்துக்குள் மாத்திரம் 968,000 மேன்முறையீடுகளும்,17,500 முறைப்பாடுகளும் கிடைக்பெற்றுள்ளன எனவும் அவர் கூறினார்.

அத்துடன், இந்த மேன்முறையீடு, முறைப்பாடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக மீளாய்வு செய்யப்படும் எனவும் தகுதிவாய்ந்த தரப்பினர்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US