விரைவில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும்! மக்களுக்கு அவசர அறிவிப்பு
"அஸ்வெசும" சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதை இலக்காகக் கொண்ட முறையான வேலைத்திட்டமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03.08.2023) நடைபெற்ற ஊடக மாநாட்டில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை காலமும் சமூக நலன்புரி வேலைத்திட்டத்தில் நிலவிய குறைபாடுகளை நிவர்த்தி செய்து அடுத்த வருடத்திற்கான புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பிலான பூர்வாங்கப் பணிகள் பிரதேச செயலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அஸ்வெசும சமூக நலன்புரித்திட்டத்தில் 20 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அவை பரீட்சிக்கப்பட்டு அதில் தற்போது 1,792,265 விண்ணப்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இப்பெயர் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர் 10 இலட்சத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகளும், சுமார் 120,000 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளன.
தற்போது அவை தொடர்பான பரிசீலனைகள் இடம்பெற்று வருவதுடன், உரிய மேன்முறையீடுகளையும், ஆட்சேபனைகளையும் மறுபரிசீலனை செய்த பின், உரிய இலக்கை அடைய முடியும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
சமுர்த்தி கொடுப்பனவு
தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும் சுமார் 1,280,000 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளன. இதில் 887,653 குடும்பங்கள் இத்திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, நிவாரணம் பெற குறித்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத 393,094 குடும்பங்களின் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான விசாரணைகள் முடியும் வரை வழமை போன்று அவர்கள் பெற்று வந்த சமுர்த்திக் கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது, முதியோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் அங்கவீனர்களுக்கு வழங்கப்படும் நலன்புரிக் கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்பட்டது போல் வழங்கப்படும். அதன்படி, முதியோர் உதவித்தொகை தபால் நிலையங்கள் மூலமாகவும், சிறுநீரக நோயாளிகள் மற்றும் அங்கவீனர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி உதவித் தொகை பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது வழிபாட்டுத் தலங்கள், முதியோர் இல்லங்கள், மற்றும் அங்கவீனர் நிலையங்களில் உள்ள 11,660 பேருக்கு அவர்கள் பெற்று வந்த சமூக நலன்புரிக் கொடுப்பனவுகளை தொடர்ந்தும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு புதிய முறைமையின் கீழ் அஸ்வெசும சமூக நலன்புரி கொடுப்பனவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு இந்த அஸ்வெசும வேலைத்திட்டத்தின் ஊடாக எவரும் கைவிடப்படாத வகையிலேயே இந்த நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுகிறது.
தற்போது வழங்கப்பட்டுள்ள வங்கிக்கணக்குகள் தொடர்பில் உறுதிப்படுத்தல் பணிகள் நிறைவடைந்ததுடன் அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும், தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் கூடிய விரைவில் வங்கிக் கணக்குகளைத் தொடங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
