அஸ்வெசும நலன்புரி திட்ட விண்ணப்பங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நலன்புரித் திட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்கனவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தவறியவர்கள் நாளை மறுதினம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும விண்ணப்பங்கள்
இதற்குரிய விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 17 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், நன்மைகளை எதிர்பார்த்து இரண்டாம் கட்டமாக 455,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
