குறைந்த வருமானம் பெறுவோருக்கு மற்றுமொரு கடன் திட்டம் அறிமுகம்
சமுர்த்தி அபிவிருத்தி வங்கியின் ஊடாக அஸ்வெசும கடன் திட்டமொன்று இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் ஊடாக தொழில் முயற்சி, விவசாயம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பவற்றுக்காக விசேட முறைமையின் கீழ் கடன்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நலன்புரி திட்டங்கள்
மேலும், நலன்புரி திட்டங்கள் ஊடாக மாத்திரம் நாட்டை வளப்படுத்த முடியாது என்றும் சிறந்த உற்பத்திகள் மூலமாகவே நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பான நம்பிக்கையை மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்தக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
