நீடிக்கப்பட்டது கால எல்லை: விரைவில் விண்ணப்பிக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த காலக்கெடு 2024 மார்ச் 22 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு
அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஏற்கும் பணி பெப்ரவரி 15ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

அதன்படி, முதல் கட்டத்தின் போது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத அல்லது வீட்டுத் தகவல் கணக்கெடுப்பில் பங்கேற்காத குடும்பங்கள் புதிய கட்டத்தின் போது விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
අස්වැසුම සුබ සාධක ප්රතිලාභ වැඩසටහනේ දෙවැනි අදියර සඳහා අයදුම්පත් කැඳවීමේ දිනය මාර්තු 22 දක්වා දීර්ඝ කෙරේ. මේ වන විට නව අයදුම්පත් 130,000ක් දෙවැනි වටය සඳහා දත්ත පද්ධතිය වෙත ලැබී ඇති අතර තවත් අයදුම්පත් ප්රමාණයක් ප්රාදේශීය ලේකම් කාර්යාල මගින් දත්ත පද්ධතිය වෙත ඇතුළත් කළ යුතුව ඇත… pic.twitter.com/m9ieM8xSJ3
— Shehan Semasinghe (@ShehanSema) March 14, 2024
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam