அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கான அறிவிப்பு
அஸ்வெசும திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக ஏனைய பயனாளிகளுக்கான நன்மைகள் எந்த வகையிலும் குறைக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும விண்ணப்பங்கள்
இதேவேளை, அடுத்த வருடம் முதல் அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு தொகையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி அடுத்த வருடம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை சுமார் 4 இலட்சமாக அதிகரிக்குமாறும் தெரிவித்திருந்தார்.
மேலும், அஸ்வெசும விண்ணப்பங்களை கணணி மயமாக்கியதில் கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப பிழைகளை சரி செய்ய ஜனவரி முதல் புதிய விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam