படையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞரின் அஸ்தி
யாழ்.குருநகர் பகுதியில் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞரின் அஸ்தி கொட்டடி மயானத்துக்குப் பாடை கட்டி மேள வாத்தியத்துடன் படையினரின் பாதுகாப்புடன் இன்று எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
குருநகர்ப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜெரோன் (வயது 24) என்கின்ற இளைஞன் உயிரிழந்த நிலையில் மரணத்தின் பின்னரான பரிசோதனையில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
உயிரிழந்தவரின் உறவுகள் ஐயம்கொண்டு நீதிமன்றத்தை நாடியதால் மீ ண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உடல் கொரோனா விதிமுறையின் கீழ் தகனம் செய்யப்பட்டு அதன் அஸ்தி உறவுகளிடம் கையளிக்கப்பட்டது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட அஸ்தியின் இறுதி ஊர்வலமே இன்று நடைபெற்றது.
இதன்போது அஸ்தி நிலப்பாவாடை விரித்து மேளவாத்தியத்துடன் பாடையில் எடுத்துச் செல்லப்பட்டு கொட்டடி மயானத்தில் இறுதி நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன்,இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam