வாழ்க்கையில் லங்கா பிறீமியர் லீக்குடனான தொடர்பு மிகவும் அற்புதமானது: வாசிம் அக்ரம்
லங்கா பிறீமியர் லீக் (LPL) 2022 இன் இறுதிப் போட்டியைப் இலங்கையில் பார்க்கப்போவதாக லங்கா பிறீமியர் லீக்கின் விளம்பர தூதர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
தூதர் வாசிம் அக்ரம் வருகை
டிசம்பர் 23.12.2022 அன்று நடைபெறும் போட்டியின் இறுதி ஆட்டத்தின் போது அவர் சமூகமளிக்கவுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், தனது வாழ்க்கையில் லங்கா பிறீமியர் லீக்குடனான தொடர்பு மிகவும் அற்புதமானது. இறுதிப் போட்டியைக் காண ஆவலாக உள்ளேன்.
மேலும் இளம் உள்நாட்டு வீரர்களிடமிருந்து சில சிறந்த ஆட்டங்களை நான் பார்த்திருக்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.
இறுதி போட்டி
இதேவேளை இன்று நடைபெறும் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான யாழ்.கிங்ஸ் அணி கண்டி ஃபோல்கன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதேவேளை காலி
கிளாடியேட்டர்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும்
நடைபெறும்.

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
