தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நீர் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வடிகாலமைப்புச் சபையின் தலைவருடனான சந்திப்புகளில் பங்கேற்காமை மற்றும் டெண்டர் மதிப்பீட்டுக் குழுக்களின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமை போன்ற சில தொழிற்சங்க நடவடிக்கைகளை அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (05.01.2024) முதல் முன்னெடுத்துள்ளனர்.
வெற்றிடமாகவுள்ள பதவிகள்
வடிகாலமைப்புச் சபையிலே மேலதிக பொது மேலாளர் மற்றும் பொது மேலாளர் திட்டப்பணிகளுக்கு ஆட்களை நியமிக்க வேண்டிய நிலைலை காணப்படுகிறது.
ஆனால் நீர் வழங்கல் சபையின் தலைவர் குறித்த இரு வெற்றிடங்களையும் தவிர்த்து மேலதிக பொது முகாமையாளர் தணிக்கை மற்றும் மேலதிக பொது முகாமையாளர் வர்த்தகம் ஆகிய நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானித்து வருவதாக பொறியியலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால், குறித்த வெற்றிடம் தொடர்பான கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காவிடில் தாம் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தயார் நிவையில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 10 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
