உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 51 பேரையும் எதிர்வரும் ஜூலை 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இன்று உத்தரவிட்டுள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்தாரியான சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சி பெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்ததாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கே நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

15 பேர் பிணையில்
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்த சஹ்ரான் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 69 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்குல் மேற்கொண்ட நிலையில், இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

5 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து 51 பேர் பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, பதுளை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியல்
இந் நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது எரிபொருள் சூழ்நிலை காரணமாக மன்றுக்கு அழைத்துவரப்படவில்லை.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலரை பாதுகாப்புடன் அழைத்துவந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 51 பேரையும் எதிர்வரும் 5 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam