உதவிகளின் வாசல் கதவை திறந்து விட்டது: எஞ்சியதை சாதிக்கவாவது ஒன்றுபடுங்கள் - நசீர் அஹமட்

International Monetary Fund Ranil Wickremesinghe Sri Lanka Politician Naseer Ahamed Economy of Sri Lanka
By Renuka Mar 22, 2023 05:24 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்குக் கிடைத்துள்ளதால், இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டுமென சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதையிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவியுள்ளது. இவ்வுதவியைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி என்பனவும் உதவ உள்ளன.

உதவிகளின் வாசல் கதவை திறந்து விட்டது: எஞ்சியதை சாதிக்கவாவது ஒன்றுபடுங்கள் - நசீர் அஹமட் | Assistance From The International Monetary Fund

ரணில் விக்கரமசிங்க ஆட்சி

அரசியல் நோக்கில், நாட்டின் நிலைமைகளை தலைகீழாகக் காட்டுவதற்குச் சிலர் முயற்சிகளை முன்னெடுத்த போதிலும்,ஜனாதிபதியின் தலைமையில் சர்வதேசம் நம்பிக்கை வைத்துள்ளது. இதனால்தான், இந்நிதியுதவிகள் எமக்குக் கிடைத்துள்ளன.

இனியாவது எதிர்க்கட்சிகள் அதிகார ஆசைகளை மறந்து மக்களின்,பசி,பட்டினி மற்றும் பொருளாதார நெருக்கடிகளைப் போக்குவதற்கு முன்வர வேண்டும். இதற்காக ஜனாதிபதி எடுக்கும் சகல நடவடிக்கைகளையும் இவர்கள் ஆதரிப்பது அவசியம்.தேர்தலை இலக்கு வைத்தோ, ஆசனங்களைக் குறிவைத்தோ செயற்படும் சூழல் இதுவல்ல. இதைக் கருதித்தான், அன்று விடுக்கப்பட்ட அழைப்பையேற்று ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க ஆட்சியைப் பாரமேற்றார்.

அவரின் துணிச்சல் வீண் போகவில்லை. இப்போது அடைந்திருப்பது சாதனையின் முதற்கட்டமே. இன்னும் பல கட்டங்களைக் கடந்து சாதிக்க வேண்டியுள்ளது. இவற்றை விரைவாகச் சாதிப்பதற்கே சகலரதும் ஒத்துழைப்பைக் கோருகிறோம்.

உதவிகளின் வாசல் கதவை திறந்து விட்டது: எஞ்சியதை சாதிக்கவாவது ஒன்றுபடுங்கள் - நசீர் அஹமட் | Assistance From The International Monetary Fund

மக்கள் பிரதிநிதிகளுக்குள்ள பொறுப்பு

தனியே நின்று சாதிப்பதானால்,பல வருடங்கள் தேவைப்படலாம்.நாடு இன்றுள்ள நிலையில்,இனியும் இதற்கான முயற்சிகள் காலவிரயங்களாகக் கூடாது.

ஏனெனில்,எஞ்சியுள்ள இந்தச் சாதனைகளே, நடுத்தர மற்றும் அடிமட்ட பொருளாதாரத்திலுள்ள குடும்பங்களை முன்னேற்றும். எனவே,எஞ்சியுள்ளவற்றை சாதிக்கவாவது, எதிரணிகள் ஒத்துழைப்பது அவசியம்.

சொந்த இலக்குகளை அடைந்து கொள்ளும் ஆசைகளை ஒருபுறம் வைத்துவிட்டு நாட்டுப்பற்று மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபடுவதுதான், மக்கள் பிரதிநிதிகளுக்குள்ள பொறுப்பு. இப்பொறுப்புக்களில் ஒன்றிணைய வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US