கல்வியியற் கல்லூரிகளை திறக்குமாறு பணிப்பு
கல்வியியற் கல்லூரிகளை நாளை 15ம் திகதி முதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கோவிட் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள், தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளை மீண்டும் திறக்கப்படும் மேற்படி கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (18) ஆரம்பிக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை, பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசியரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை,குறித்த கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
