பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உயரதிகாரிகளின் சொத்து விபரங்கள் குறித்து விசாரணை
பொலிஸ் மற்றும் சிறைச்சாலைத் திணைக்களங்களின் உயரதிகாரிகளின் சொத்து விபரங்கள் குறித்த விசாரணையொன்றை ஆரம்பிக்க இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை தடுப்பதற்கான ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அண்மைக்காலமாக பொலிஸ் மற்றும் சிறைச்சாலையின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இலஞ்சக் குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகின்றனர்.
சொத்துக்கள்
அதன் காரணமாக குறித்த திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை சொத்துக்கள் தொடர்பான விசாரணையொன்றை ஆரம்பிக்க தீர்மானிக்க்பபட்டுள்ளது.
எனினும் குறித்த திணைக்களங்களில் ஏராளம் ஊழியர்கள் இருப்பதன் காரணமாக ஆரம்ப கட்டமாக அதன் உயரதிகாரிகள் சமர்ப்பித்துள்ள சொத்து விபரங்கள் மற்றும் அதற்கான வருமான வழிகள் குறித்து விசாரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
குறித்த விசாரணை இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடித்தடுப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
