முன்னாள் பொலிஸ் கட்டளை தளபதி ஒருவரின் சொத்துக்கள் முடக்கம்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் நீதிமன்றத்தை தவிர்த்த வெலிகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிடியாணை உத்தரவை இன்றையதினம்(25.03.2025) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி, அனுமதிப்பத்திரம் இன்றி 20 கறவை மாடுகளை கொண்டு சென்ற ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர்கள் கைது
குறித்த 20 கறவை மாடுகளை அரசாங்கத்திற்கு சொந்தமான கால்நடை பண்ணை ஒன்றில் ஒப்படைக்குமாறு பொலன்னறுவை நீதவான் அன்றைய தினம் உத்தரவிட்டிருந்தார்.
எனினும், கறவை மாடுகளை கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க அப்போதைய வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏற்பாடு செய்ததாக நீதிமன்றத்துக்கு கடிதம் இன்று அனுப்பப்பட்டது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட அநுராதபுரம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை அண்மையில் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
சொத்துக்கள் முடக்கம்
எனினும், பிரதான சந்தேகநபரான வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் முற்படுத்த முடியவில்லை. எனவே, அவரை கைது செய்யுமாறு கடந்த 11ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது பூஜாபிட்டிய பொலிஸில் கடமையாற்றும் அவர் சுகயீன விடுப்புப் பதிவு செய்து அப்பகுதியை விட்டும் வெளியேறியுள்ளார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவரின் சொத்துக்களை முடக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri
