காதலிக்க மறுப்பு தெரிவித்த யுவதிக்கு நேர்ந்த கொடூரம்
காதலிக்க மறுப்பு தெரிவித்ததன் காரணத்தினால் பெண் ஒருவரை கத்தியால் குத்திய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் கொழும்பு - நாரஹேன்பிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர், நாரஹேன்பிட்ட நில அளவையாளர் அலுவலக கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணை
இந்நிலையில் காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரும், காயமடைந்த யுவதியும் காலியில் இருந்து நெடுஞ்சாலை வழியாக நாரஹேன்பிட்ட பகுதிக்கு பேருந்தில் வந்துள்ளனர்.
நாரஹேன்பிட்ட கிருள வீதியில் அமைந்துள்ள நில அளவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக பேருந்தில் இருந்து இறங்குவதற்கு தயாரான போதே சந்தேகநபர் அவர் வைத்திருந்த கத்தியால் யுவதியை தாக்கியுள்ளார்.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளன யுவதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாரஹேன்பிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
