யாழில் தமிழ் பெண்ணின் சாபத்தால் மிரண்டு போன தென்னிலங்கை மக்கள்(Video)
யாழ் தையிட்டி விகாரையில் இன்று நடைபெறும் கஜினமகா உற்சவத்திற்கு சென்ற பெரும்பான்மையின மக்களை நோக்கி சாபம்விடும் வகையில் இளம் குடும்ப பெண் ஒருவர் எழுப்பிய கேள்விகள் பேசுபொருளாகியுள்ளது.
தமக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு பெரும்பான்மையின சிங்கள மக்கள் ஆதரவு வழங்க கூடாது என இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் வலியுறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
"உங்களுடையதா காணி? காணி உறுதிப்பத்திரம் இருக்கிறதா அண்ணா? உங்களுடையதா காணி? அண்ணா இங்கே வாருங்கள்.
உங்களுடையதா காணி?அது எங்களுடைய காணி, பொதுமக்களின் காணி. உங்களுக்கு தெரியுமா? சென்று அவர்களுக்கு கூறுங்கள்.
உங்களுக்கு புத்திரர்கள் இருக்கின்றார்கள் தானே. இவ்வாறு செய்ய வேண்டாம்.தயவு செய்து இவ்வாறு செய்ய வேண்டாம். இந்த விகாரைக்கு ஆதரவு வழங்க வேண்டாம். அது இருக்கும் காணி எங்களுடையது.
வெண்ணிற ஆடை அணிந்து பூக்களை கொண்டு செல்லுங்கள். நாம் தற்போது வீதியில் இருக்கின்றோம். அக்கா, அண்ணா, தம்பி உங்களுக்கு இல்லையா?அண்ணா, அது எங்களுடைய காணி, உங்களுடையதா அந்த காணி, உறுதிப்பத்திரம் இருக்கின்றதா? காணி உறுதி பத்திரத்தை எங்கே காட்டுங்கள்.
இது உங்கள் தலைமைமுறைகே நல்லதல்ல. மகன் மகள் உங்களுக்கு இருக்கின்றார்கள் தானே" என ஆவேசமாக பேசியுள்ளார்.
இதேவேளை, தீப்பந்தங்களை ஏந்தியவாறு பெரும்பான்மை இன மக்கள் அங்கு சென்று தமது வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.