பிரித்தானிய மருத்துவர் ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள 43 குற்றச்சாட்டுக்கள்
முன்னாள் மருத்துவர் ஒருவர் மீது, சிறுவர் பாலியல் குற்றங்கள் உட்பட நோயாளிகள் சம்பந்தப்பட்ட பல பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பேர்மிங்காமைச் சேர்ந்த 38 வயதான நெதனியேல் ஸ்பென்சர் என்ற மருத்துவர் மீதே இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
2017 மற்றும் 2021இற்கு இடையில்
15 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள், 17 பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் உட்பட்ட 43 குற்றச்சாட்டுக்கள், அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

2017 மற்றும் 2021இற்கு இடையில் 38 நோயாளிகளுக்கு எதிரான குற்றங்களை ஆராய்ந்த உள்ளூர் பொலிஸாரின்; விசாரணையைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் 2026 ஜனவரி 20ஆம் திகதி ஸ்பென்சர் வடக்கு ஸ்டாஃபோர்ட்ஷையர் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |