கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்:விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்
பெலவத்தையில் வீடொன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் சாமினி விஜேபண்டார முன்னிலையில் இன்று(07.02.2023) முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள புதிய தகவல்

இதேவேளை நேற்று நடந்த பிரேத பரிசோதனையில் வர்த்தகரின் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த வீட்டில் வர்த்தகரை தாக்க பயன்படுத்திய தடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொலைக்குப் பிறகு, சந்தேகநபர்கள் வர்த்தகரின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் பொருட்களை வாங்குவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan