ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கண்டிக்கிறேன் : த.தஜீவரன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் தமது கட்சியின் தலைவரின் பெயரை பயன்படுத்தி தங்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமது தலைவருக்கும் கட்சிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் வெளியிடுவோருக்கு எதிராக எதிர்வரும் காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சேருபூசும் செயற்பாடுகள்
கடந்த 25ஆம் திகதி மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜோசப்பரராஜசிங்கம் நினைவேந்தல் நிகழ்வில் தமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் தொடர்பில் தெரிவித்த கருத்துகளுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிக்கின்றோம்.
இலங்கை தமிழரசுக்கட்சியானது தொடர்ச்சியாக தமது கட்சியின் தலைவர் மீது சேருபூசும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது.
தமிழரசு கட்சிக்குள் ஆயிரம் பிரச்சினை இருக்கும்போது அதனை தீர்க்காமல் தமது கட்சியையும் கட்சி தலைவரையும் விமர்சித்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
